பி.எம். கிசான் உதவித்தொகை ரூ.6000 வேண்டுமா? - உடனே இதை செய்யுங்க! - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, April 24, 2022

பி.எம். கிசான் உதவித்தொகை ரூ.6000 வேண்டுமா? - உடனே இதை செய்யுங்க!

 பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை 11-வது தவணை பெற விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.





பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என 3 தவணைகளாக விவசாயிகளில் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். ஏற்கனவே 10 தவணைகள் பெற்றுள்ள நிலையில், 11-வது தவணைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை வழங்கும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே 11-வது தவணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிக் கணக்குடன் KYC எனப்படும் ஆதார் விபரங்களை விவசாயிகள் அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ‘Farmers Corner’ வசதியில் e-KYC விருப்பத்தை கிளிக் செய்து, ஆதார் அடிப்படையிலான OTP சமர்பிக்கலாம் . பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இந்த வேலையை உங்கள் செல்போன், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவற்றின் மூலம் வீட்டில் அமர்ந்தபடியே மிகவும் எளிமையாக செய்யலாம்.

இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் 1,28,000 விவசாயிகள் பயன் பெறுகின்றனர். மத்திய அரசு தற்போது திட்ட நிதி வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும்.

தற்போது விவசாயிகள் 11வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியமாகும். எனவே தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்துக் கொள்ள வேண்டும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலம் பிரதம மந்திரி கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரி பார்க்கலாம். என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts