விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க தனித்தனி கட்டணம்: உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்த டிராய் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, December 28, 2018

விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க தனித்தனி கட்டணம்: உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்த டிராய்


விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாடிககையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் டிராய் தகவல்; தெaரிவித்துள்ளது. 

டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ந் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பாணை வெளியிட்டது.
ஆனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் இன்னும் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிப்பது என்பது இயலாத காரியம் என்பதால், டிராயின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ஆம் தேதி முதல் விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாடிககையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக, டிராய் தரப்பில் ஆஜரான வக்கீல் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன் , இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அப்போது டிராய் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Popular Posts