உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஒரு வரியும் இல்லாமல் எவ்வாறு எடுப்பது? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Tuesday, January 8, 2019

உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஒரு வரியும் இல்லாமல் எவ்வாறு எடுப்பது?


     PF AMOUNT WITHDRAWAL WITHOUT TAX 

BEST SOLUTION IN TAMIL



உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஒரு வரியும் இல்லாமல் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் PF கணக்கில் உங்களின் PAN எண்ணை இணைத்திருக்க வேண்டும் .
அப்படி இணைக்க வில்லை எனில் உங்களின் PF கணக்கு சேமிப்பு பணத்தை  எடுக்க முற்படும்போது  உங்களின் PF கணக்கில் உள்ள தொகையில் இருந்து வருமான வரி எடுக்க படும் மீதமுள்ள பணம் மட்டுமே உங்களுக்கு வழங்க படும்.

        இதனை தவிர்ப்பதற்கு என்ன வழி ?

       இதனை தவிர்க்க இரண்டு வழிகள் உள்ளது 

          1.உங்களின் PF சேமிப்பு கணக்கில் உங்களின் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும் .
 

          2.அப்படி உங்களால் பான் எண்ணை இணைக்க முடியாத நிலையில்  தாங்கள் படிவம் 15G /15H  பூர்த்தி செய்து உங்களின் PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .


இவ்வாறு செய்வதால் நீங்கள் எந்த ஒரு வருமான வரியும்  செலுத்தாமல் உங்களின் PF சேமிப்பு கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த படிவத்தினை  அனுப்புவதன் மூலமாக உங்களது ஆண்டு வருமானம் வரி விதிப்பு முறைகளுக்கு உட்பட்டதாக கருதப்பட்டு எந்த வரியும் விதிக்காமல் PF சேமிப்பு கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ள வழிவகைசெய்யும்,

இந்த படிவத்தை pf சேமிப்பு பணத்தை claim செய்ய வேண்டுகோள் விடுத்தபிறகு வரும் ஒப்புதல் அறிக்கையுடன்  சேர்த்து 5 நாட்களுக்குள்  உங்களுக்கு PF அலுவலகத்திற்கு சென்றடையுமாறு அனுப்புதல் வேண்டும், அப்பொழுதுதான் எந்த  வரியும் உங்களின் pf சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்க படமாட்டாது என்பது குறிப்பிட தக்கது .

       
இந்த படிவத்தை எப்படி நிரப்புவது வாங்க பார்க்கலாம்.

 படிவம் 1 மட்டும் நிரப்பினால் போதுமானது படிவம் 2  நிரப்ப வேண்டாம் .அதை அப்படியே விட்டு விடவும் .

வருடங்கள் எதயும் நிரப்ப தேவை இல்லை .உங்களின் விபரங்களை மட்டும் நிரப்பினால் போதும் .

படிவம் 1 முதல் 15 வரை மட்டும் நிரப்புங்கள் .

1.உங்களின் பெயரினை பதிவு செய்யவும் ,

2.உங்களின் பான் எண்ணை பதிவு செய்யவும் ,

3.எண் 3ல் (INDIVIDUAL ) என பதிவு செய்யவும் ,

4.நடப்பு ஆண்டுகள் மற்றும் அதற்க்கு அடுத்த ஆண்டினை பதிவு செய்யவும் EX (2018-2019)

5.(RESIDENT )என பதிவு செய்யவும் ,

6.உங்களின் கதவு எண்  அல்லது உங்களின் கட்டிடத்தின் எண்ணை  பதிவு செய்யவும் ,

7.உங்களின் வீட்டிற்கு என ஏதாவது பெயர் இருந்தால் அதை எழுத்தி கொள்ளுங்கள் இல்லை என்றால் எதுவும் நிரப்ப வேண்டாம் ,

8.உங்களின் தெரு பெயரை நிரப்பவும் ,

9.உங்களின் கிராமத்து பெயர் அல்லது உங்களின் வீடு உள்ள பகுதியின் பெயரை நிரப்பவும் ,

10.உங்களை  மாவட்டத்தை  பதிவு செய்யுங்கள் ,

11.உங்களின் மாநிலத்தை பெயரை பதிவு செய்யவும் ,(தமிழ்நாடு )

12.உங்களின் பகுதி PINCODE பதிவு செய்யவும் .(638462)

13.உங்களின் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யவும் .

14.உங்களின் தோலை பேசி எண்ணை பதிவு செய்யவும் ,

15.நீங்கள் வருமான வரி செலுத்தியிருந்தால் YES என்பதை தேர்வு  செய்யவும்  இல்லை என்றால் NO என்பதனை தேர்வு செய்யவும் .


இதற்க்கு கீழே உள்ள 16 முதல் 19 வரை உள்ள எந்த ஒரு பாதியையும் நிரப்ப வேண்டாம் ,

இதற்க்கு அடுத்ததாக Signature of declarant  என்று கொடுக்க பட்ட இடங்களின் உங்களின் கையெழுத்தினை பதிவு செய்யவும் .

I /WE ........ யன கொடுக்க பட்டிருக்கும் இடத்தினுள் உங்களின் பெயரினை பதிவு செய்யவும் .

இறுதியாக

PLACE .......
DATE ..........   இந்த இரண்டு பகுதியையும் நிரப்பி கொள்ளுங்கள் .

இரண்டாவது படிவத்தை நிரப்பாமல் அப்படியே விட்டு விடுங்கள் .

மேலும் இதனுடன் உங்களின் பான் அட்டையை நகல் எடுத்துக்கொள்ளவும் அந்த நகலீல் உங்களின் கையெழுத்திட்டு கொள்ளவும்  இந்த நகலையும் FORM 15G  உடன் இணைக்கவும் .

மேலும் அதனுடன் உங்களின் விபரங்களையும் ஒரு காகிதத்தில் நிரப்பி கொள்ளுங்கள்  .
அவை கீழே கொடுக்க பட்டுள்ளது .

1.உங்களின் பெயர்
2.உங்களின் PF கணக்கு எண்
3.உங்களின் UAN எண்ணெயும் எழுதவும்  ,
4.உங்களின் பான் எண்ணெயும் எழுதவும் .
மேற்கண்ட விபரங்கள் அடங்கிய ஒரு அனுமதி கடிதம் மற்றும் 15G OR 15H மற்றும் பான் கார்டின் நகல் இவைகளை உங்களது PF அலுவலகத்தில் சம்ர்பிக்கவேண்டும்
இப்போது இந்த மூன்று படிவத்தையும் உங்களின் PF அலுவலகத்திற்கு தபால் அல்லது EMAIL  அல்லது  நேரிடையாகவும் சென்று சமர்பிக்கலாம்,

வருமான வரிவிகிதம் 

1.உங்களின்  PF சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் அளவு 50000க்கும் அதிகமாக இருந்தால் உங்களின் சேமிப்பு தொகையில் இருந்து  35% தொகையானது வரியாக  எடுக்க பட்டு மீதமுள்ள தொகை மட்டும் உங்களின் கணக்கிற்கு அனுப்ப படும் .

2.உங்களின்  PF சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் அளவு 50000க்கும் குறைவாக இருந்தால் சேமிப்பு தொகையில் இருந்து  10% தொகையானது வரியாக  எடுக்க பட்டு மீதமுள்ள தொகை மட்டும் உங்களின் கணக்கிற்கு அனுப்ப படும் .

இதன் நிலையை ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியாது என்பதும் குறிப்பிட தக்கது .

இந்த LINK யை கிளிக் செய்து  உங்களின் படிவத்தை  பதிவிறக்கம் செய்யலாம் .





No comments:

Post a Comment

Popular Posts