உங்கள் PF கணக்கில்உங்களின் பெயர் , பிறந்த தேதி ,பாலினம் இவைகளில் தவறுகள் இருந்தால் எப்படி திருத்துவது ? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Thursday, January 17, 2019

உங்கள் PF கணக்கில்உங்களின் பெயர் , பிறந்த தேதி ,பாலினம் இவைகளில் தவறுகள் இருந்தால் எப்படி திருத்துவது ?

EPFO Name Correction ,DOB Correction, Gender Correction Fathers Name Correction in Online

உங்கள் PF கணக்கில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,உங்களின் பாலினம்  தவறாக பதிவு  செய்யப்பட்டுள்ளதா
இதில்  ஏதேனும்  தவறுகள் இருந்தால் உங்களின் PF கணக்கில் உங்களின் ஆதார் எண்ணிணை இணைக்க முடியாது இணைக்க  முற்படும்  பொது  உங்களுக்கு  error வரும் .

உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தினை எடுக்க  உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் உங்களின் PF கணக்குடன் இணைக்க வேண்டியது மிகவும் அவசியமானது .

உங்களின் பெயர் , பிறந்த தேதி ,பாலினம் இவைகளில் தவறுகள் இருந்தால் எப்படி திருத்துவது ?    
  

EPFO உறுப்பினர் போர்ட்டில் புதிய பயனர்களுக்கான பதிவு செயல்முறை பயன்படுத்தி உங்கள் UAN கணக்ககை செயல்படுத்த வேண்டும் .


பதிவு செயல்முறையை வெற்றிகரமாக முடித்தவுடன்உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும் 


EPFO உறுப்பினர் போர்ட்டலைப் பார்வையிட பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும் :
  https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

EPFO உறுப்பினர் போர்ட்டில் புதிய பயனர்களுக்கான உள்நுழைவு முலமாக உங்களின் UAN எண் மற்றும் PASSWORD யை பதிவு செய்யவும் .


இறுதியாக கீழே உள்ள CAPTCHA யை பதிவு செய்து உங்களின் Login பகுதியை Login செய்யவும் . 

பின் வரும் திரையில் உங்கள்  uan நம்பர், உங்கள் பெயர்,உங்களின் பிறந்த தேதி,ஆதார்  ,பான், பேங்க் அக்கௌன்ட் நம்பர் இணைப்பு பற்றிய தகவல்கள் இடம் பெறும்,

உங்கள்  பெயர்,உங்களின் பிறந்த தேதியில் ஏதேனும்  தவறுகள் இருந்தால்  அதை திருத்தம் செய்ய மெனு பாரில் உள்ள Manage என்கிற தேர்வை தேர்வு செய்யவும்மேலும் தோன்றும் திரையில் Modify Basic Details என்கிற தேர்வை தேர்வு செய்யவும் .
Modify Basic Details என்கிற தேர்வை தேர்வு செய்வதன்முலமாக கீழே உள்ளது போன்று உங்களின் தகவல்களை திருத்துவதற்கான பக்கம் தோன்றும் .இறுதியாக நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களையும் சரி பார்த்து கொள்ளவும் .பின்னர் கேழே கொடுக்க பட்டுள்ள Update என்கிற பட்டனை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் தகவல்கள் நீங்கள் பணி  புரிந்த அல்லது பணி  செய்துகொண்டிருக்கும் நிறுவனத்தின் தகவல் திருத்தத்திற்கான உத்திரவாதத்திற்கு காத்திருக்கும் .


உங்களின் நிறுவனம் இதனை உறுதி  (Approval ) செய்யவேண்டும் .

எனவே பின் வரும் திரையை பிரிண்ட் செய்து அத்துடன் உங்கள் ஆதார் நகலை வைத்து நீங்கள் பணி  புரிந்த அல்லது பணி  செய்துகொண்டிருக்கும் நிருவனத்திருக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பிக்கவும்,

அதன் அடிப்படையில் தங்கள் பணி  புரிந்த அல்லது பணி  செய்துகொண்டிருக்கும் நிறுவனம் தங்கள் தகவல்களை ஒப்பிடு செய்து தங்கள் கொடுத்த தகவல் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் தகவல் திருத்தத்திற்க்கு நிறுவனம் உறுதியளிக்கும் (Approval செய்யும்)

நிறுவனம் உங்கள் தகவல்களை உறுதி (APROVAL) செய்த பின்னர், உங்களின் தகவல்கள் உங்களின் PF அலுவலகத்திற்கு செல்லும் அவர்கள் உறுதியளித்த பின்னர் உங்களின் தகவல்கள் மாற்றம் செய்யப்படும் .உங்களின் நிறுவனம் உறுதியளித்த நாட்களில் இருந்து  உங்களின் தகவல்கள் அதிக பட்சமாக 7 நாட்களில் PF அலுவலகத்தால் மாற்றம்  செய்யப்படும் .

தற்பொழுது உங்களின் ஆதார் எண்ணானது உங்களின் PF கணக்கில் (KYC) இணைந்து விடும் .குறிப்பு :-

உங்களுடைய பிறந்த தேதி ஒரு வருடத்திருக்கு மேல் இருப்பின் தங்களுடைய பிறப்பு சான்றிதழ் , கல்விச் சான்றிதல்,பாஸ்போர்ட், இவைகளில் ஏதேனும் ஒன்றை ST Class Gazetted Officer or Notary அதாவாது நீதிபதி அல்லது நோட்டரி பப்ளிக் அல்லது ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் ) யிடம் இருந்து முத்திரை மற்றும் கையொப்பம் வைத்து அதுடன் MODIFY BASIC DETAILS ல் மற்றம் செய்த பின் வரும் திரையை பிரின்ட் செய்து அத்துடன் அவர்கள் வழங்கிய ஒப்புதல் நம்பரை மேற்கோள்காட்டி தங்களுடைய தகவல்களை திருத்தி தருமாறு பணிவன்புடன் ஒரு வேண்டுகோள் கடிதம் ஒன்றை எழுதி இவைகளை உங்கள் PF அலுவலகத்திற்கு 15 நாட்களில் தபால் அல்லது நேரிடையாகவோ சென்று வழங்குதல் வேண்டும்,


இதன் மூலம் உங்களின் pf கணக்கில் உள்ள தகவல்களை எளிதில் திருத்தம் செய்து கொள்ள முடியும் . 

-      நன்றி
      இவன்
தேவா திருப்பூர்
 8667330282

1 comment:

Popular Posts