தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த இலவசமாக தரும் இந்த 2000 ரூபாய் யாருக்கு கிடைக்கும் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, February 17, 2019

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த இலவசமாக தரும் இந்த 2000 ரூபாய் யாருக்கு கிடைக்கும்


தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த இலவசமாக தரும் இந்த 2000  ரூபாய் யாருக்கு கிடைக்கும்?


2000 பணம் வாங்க தகுதியான குடும்பத்தாருடைய தகவல் ஏற்கனவே அரசாங்கத்தில் அச்சடிக்கப்பட்டு அந்தப் பஞ்சாயத்து தலைவரின் மூலம் அனைத்து பொது மக்களுக்கும் கொடுக்கப்படுகிறது இதன் முக்கிய பங்குவகிப்பது ஏரி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த மனு கொடுக்கப் படுகிறது.

AYY அட்டை யுடைய 35 கிலோ அரிசி வாங்கும் குடும்பத்தாருக்கு கிடைக்கிறது!

*இந்த மனுவில் ஏரி வேலை செய்யும் அட்டையில் உள்ள எண் பதிவிடப்பட்டுள்ளது அவர்களுக்கு மட்டுமே இந்த 2000 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Click Here

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் பேருக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு: பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவும் அமைப்பு 

 சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமியால் அறிவிக்கப்பட்டவறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்ஏழை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும்பயனாளிகளைத் தேர்வுசெய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த பிப்.11-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி 110- விதியின் கீழ், “வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும். இதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இந்த நிதியை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசால் வழங்கப்படும் இந்த சிறப்பு நிதியுதவிகிராமப்புற மற்றும் நகர்ப்பற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படும். ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடுமகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இ-மதி இணையதளத்தில்மக்கள் நிலை ஆய்வுகணக்கெடுப்பு மூலம் கண்டறி யப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களின் புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்படும்.
நகர்ப்புறத்தைப் பொறுத்தவரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும். மேலும்அந்தோதய அன்ன யோஜனா பயனாளிகள் இந்தப் புள்ளி விவரங்களில் விடுபட்டிருந்தால் அவர்களின் விவரங்களும் சேர்க்கப்படும்.
சிறப்பு நிதியுதவியை ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காகவங்கிவங்கிக் கிளையின் பெயர்வங்கிக் கணக்கு எண்ஐஎப்எஸ்சி குறியீடுபொது விநியோக குடும்ப அட்டை எண்ஆதார் அட்டை எண் மற்றும் குடும்பத் தலைவர் தொழில் விவரம் போன்றவை புள்ளி விவர படிவத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து நேரடியாக சேகரிக்கப்படுகின்றன.
விவரங்கள் சேகரிப்பு
கிராமப் புறங்களில்கிராம வறுமை ஒழிப்பு சங்கம்ஊராட்சி கூட்டமைப்புசமுதாய வள பயிற்றுநர்சமுதாய மகளிர் குழு பயிற்றுநர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். நகர்ப்புறங்களில் தினசரி தற்காலிக பணியாளர்கள்தூய்மை பாரத இயக்க திட்ட ஊக்குநர்கள்சமுதாய வள பயிற்றுநர்கள் கூடுதல் புள்ளி விவரங்களைச் சேகரிக்க பயன்படுத்தப்படுகின்றனர்.
இதுதவிரஇவர்கள் சேகரிக்கும் விவரங்களைமீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும் தகுதியான அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு சிறப்பு நிதியுதவியை வழங்குவதற்காக மாவட்ட அளவிலும்சென்னை மாநகராட்சியிலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டுமகளிர் திட்ட இயக்குநரை ஒருங்கிணைப்பாளராகவும்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்சமூக நல அலுவலர்மாநகராட்சிநகராட்சி ஆணையர்பேரூராட்சி உதவி இயக்குநர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியில்ஆணையரைத் தலைவராகவும்மண்டல துணை ஆணையர் ஒருங்கிணைப்பாளராகவம்துணை ஆணையர் (கல்வி)மகளிர் திட்ட இயக்குநர்மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக அரசால் விடுவிக்கப்படும் நிதி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநரால் பெறப்பட்டுதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு விடுவிக்கப்படும். இங்கிருந்துநகர்ப்புறம்ஊரகப் பகுதிகளுக்கு மாவட்டஆட்சியர்கள் மூலம் விடுவிக் கப்படும். அதே வகையில் சென்னை மாநகராட்சிக்கும் நிதி விடுவிக்கப்படும்.
சிறப்பு நிதியுதவி ரூ.2,000, ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களுக்கு மகளிர் திட்ட இயக்குநர் மூலம் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக மின்னணு பரிவர்த்தனை முறையில் விடுவிக்கப்படும். நகர்ப்புறத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விடுவிக்கப்படும்.
இது தொடர்பான அரசாணைஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவால் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts