இனி இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்! - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Monday, March 11, 2019

இனி இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்!இனி இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்!

தமிழக மக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வாங்க இனி மணிக்கணக்கில் அரசு அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.அதைப்போலவே இனி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்வதற்கான மென்பொருள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சிறப்பு அம்சங்கள்

  • இந்த சான்றிதழ்களை மக்கள் எவ்வித சிக்கல் இன்றி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
  • தற்பொழுது 2018 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகள் அனைத்தும் மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
·         2018 ஆம் ஆண்டிற்கு முந்தைய பதிவுகள் தற்பொழுது வருவதில்லை . .விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் . .
·         அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ், அந்த குழந்தையின் தாய், மற்றும் குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் நாள் அன்று கையோடு வழங்கப்படும்.
·         தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ்களை பெற்றோர்கள் 21 நாட்களுக்கு பின், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

இணையதளம் http://crstn.org

No comments:

Post a Comment

Popular Posts