eSevai for all scheme - Registeration - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, March 15, 2023

eSevai for all scheme - Registeration

 


“அனைவருக்கும் இ-சேவை” திட்டம்:

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் ஒரு இ-சேவை மையத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். தமிழகத்தின் தொலைதூர எல்லைகளுக்கும் இ-சேவைகளை எடுத்துச் செல்வதன் மூலம் மாநிலம் முழுவதும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் மைய நோக்கமாகும். அதே நேரத்தில் குடிமக்களுக்கு இது ஒரு சாத்தியமான தொழில்முனைவு வாய்ப்பாக அமைகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ -சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள்(PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர்(VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (tnesevai.tn.gov.in/) இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்க “அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்” பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பித்திருந்த தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் ஆபரேட்டர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்:


தமிழ்நாடு மின் ஆளுமை முகமை:


  1. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இணைய சேவைக்களை இ-சேவை வலைத்தளம் வாயிலாக வழங்கும்.
  2. இ-சேவை அமைக்க அங்கீகரிக்கப்பட்ட ஆபரேட்டர்/விண்ணப்பதாரர்களுக்கு பயனர் ஐடி/கடவுச்சொல் வழங்கப்படும். இதில் பயோமெட்ரிக் இயக்கப்பட்டிருப்பதனால் ஒரு ஆப்ரேட்டர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளை பயன்படுத்த முடியாது.
  3. ஆபரேட்டர் ஒவ்வொரு முறை வலைத்தளத்தில் உள்நுழையும் போதும் இரண்டு-படி அங்கீகார செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.
  4. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இ-சேவை வலைத்தளத்தில் கூடுதலாக சேவைகளை தேவைப்படும்போது சேர்க்கலாம்.
  5. பொதுமக்களுக்கு முறையான சேவைகளை உறுதி செய்வதற்காக மையத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் எந்த ஒரு மையத்தையும் ஆய்வு செய்ய .தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அதிகாரிகள் முழு உரிமையுடையவர்கள்.
  6. மேலும் ஏதேனும் குற்றச்சாட்டுகள்/தவறான நடத்தை/ஐடிகளின் தவறான பயன்பாடு போன்றவை நிரூபிக்கப்பட்டால்,தமிழ்நாடு மின் ஆளுமை முகமை-ல் ஐடிகள் ரத்து செய்யப்படும், எதிர்காலத்தில் அதே ஆபரேட்டர்க்கு புதிய ஐடிகள் வழங்கப்படாது.
  7. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆனது சரியான நேரத்தில் ஆபரேட்டர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும்.

ஆபரேட்டர்கள் :

  1. ஆபரேட்டர்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் ப்ரீபெய்ட் இ-வாலட் மாதிரி(Prepaid ewallet model), ஆதார் பயோமெட்ரிக் உள்நுழைவு, போன்ற வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  2. ஆபரேட்டர்கள் இசேவை மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர், பயோமெட்ரிக் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.
  3. ஆபரேட்டர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் நல்ல அறிவும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  4. ஆபரேட்டர்கள் மைய வளாகத்தை நல்ல சூழல் மற்றும் வசதிகளுடன் பொதுமக்களுக்கு சேவைகளை எளிதாக அணுகும் வகையில் பராமரிக்க வேண்டும். காத்திருப்பு இடம், குடிநீர் மற்றும் இதர அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும். மைய கட்டிடம் அல்லது அறையானது CSC மற்றும் அதன் பயனர்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
  5. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பரிந்துரைத்தபடி வழங்கப்படும், சேவைகள் தொடர்பாக, ஆபரேட்டர்கள் இ-சேவை மையத்தின் பெயர் பலகை மற்றும் சேவைகளை காட்சி பலகை மையத்தில் பொருத்தவேண்டும்.
  6. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை -ல் தெரிவிக்கப்படும் பெயர் பலகை/ காட்சி பலகை போன்றவற்றுக்கு அனுமதிக்கப்பட்ட விவரக்குறிப்புகள் தவிர வேறு எந்த காட்சி பலகை/லோகோக்கள் அனுமதிக்கப்படாது.
  7. ஆபரேட்டர்கள் பொது மக்களுக்கு அனைத்து சேவைக் கட்டணங்களையும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முக்கியமாகக் காண்பிக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமான சேவைக் கட்டணங்களை வசூலிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  8. ஆப்ரேட்டர்கள் குறைந்தபட்சம் 2 Mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்ய வேண்டும். இதனால் குடிமக்கள் சேவைகளை தடையின்றி பெற முடியும். ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், இணைப்பு மையங்களில் இருக்க வேண்டும்.
  9. மையத்தின் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டு, மையத்தின் முன் காட்சிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒரு நாளில் வேலை நேரம் குறைந்தபட்சம் 8 மணிநேரமாக இருக்க வேண்டும்.
  10. பயனர் ஐடியைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகள்/மாற்றங்களுக்கும் ஆபரேட்டர்கள் மட்டுமே பொறுப்பு.
  11. ஆபரேட்டர்கள் குறிப்பிட்டுள்ளபடி சேவைக் கட்டணங்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  12. ஆய்வின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அல்லது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை க்கு ஏதேனும் குற்றச்சாட்டுகள் / புகார்கள் வந்தால், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை-ல் இ-சேவை ஐடிகளைத் ரத்து செய்யப்படும் மற்றும் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  13. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஏற்கனவே உள்ள சேவைகளில் கூடுதல் சேவைகள் சேர்க்கப்படும்போது, தேவைப்பட்டால் கூடுதல் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் / ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

“E-SEVAI FOR ALL” SCHEME

“E-Sevai For All “ scheme is to be launched which enables all citizens of Tamilnadu have been given opportunity to start e-Sevai centers in Tamil Nadu by Tamil Nadu e-Governance Agency.

The scheme aims to motivate the educated Youths, entrepreneurs and it will be implemented even in rural areas where there are no e-Sevai centers. The aim of this initiative is to establish at least one e-Sevai center in every village and a ward in Tamil Nadu. The objective is to increase the number of centres across the state by taking e-services to the remotest corners of Tamil Nadu while simultaneously making this a viable entrepreneurship opportunity for citizens.

Tamil Nadu e-Governance Agency establishing the e-Sevai centres through Service centre agencies like Tamil Nadu Arasu Cable TV Corporation(TACTV), Primary Agriculture Credit Co-operative Societies(PACCS), Tamil Nadu Corporation Development for women, Fisheries Department, Village Level Entrepreneurs(VLE) to provide government services to the people at their doorsteps through online. TNEGA provides e-Sevai services also through open citizen portal.

“E-Sevai For All “ scheme now made a provision to all citizens that they can start the e-Sevai centres inorder to get the services within closer proximity to provide online e-Sevai services to the people at doorsteps.

Now, once application is submitted successfully in TN-eSevai portal (tnesevai.tn.gov.in/), citizens will get the eSevai ID and Password through SMS to their registered phone number and registered mail id.

ROLES AND RESPONSIBILITIES OF TNeGA and Operator:

(A) TamilNadu eGovernance Agency:

  1. TNeGA shall be providing online services under e-Sevai portal.
  2. User ID/password shall be provided for accessing the Arasu e-sevai portals to the authorized Operator/Applicant where one operator cannot use more than one Set of IDs as it is Biometric enabled.
  3. The Operator shall undergo two- step authentication process each time they login to the portals.
  4. TNeGA can add any number of services in addition to the list as and when required.
  5. TNeGA officials shall have full rights to inspect any of the Centre at any point of time without any prior intimation to the Center for ensuring proper services to the Public.
  6. TNeGA shall block the IDs of any centers and no new ids will be provided for the same Operator in future if any allegations/misbehavior/misuse of IDs etc.., is proved.
  7. TNeGA will make arrangements to impart required training / orientation to the operators at the right time.

(B) Operators/Applicants:

  1. Operators should satisfy the standard requirements/guidelines issued by TNeGA i.e. prepaid e-Wallet model, Aadhaar enabled biometric login, e-Sign etc.
  2. Operators should ensure infrastructure facilities like computer, printer, scanner, biometric device. Biometric device is must to operate the eSevai service
  3. Operator at the centre should have passed 12th Standard. Must have a good knowledge of computer and fluency in reading and writing Tamil and English language for internet surfing so that he/she can access the portal and upload/download the forms to provide services.
  4. Operator shall maintain the premises with good ambience and facilities for easy access of services to the public. Shall have waiting area, drinking water and other basic requirements. The center building or room must be exclusively for CSC and its users.
  5. Operators shall display the e-Sevai Centre name board and Services display boards in respect of the services provided as prescribed by TNeGA.
  6. No other display board/ logos will be permitted other than specifications allowed for the Name Board Display Board etc., which will be communicated by TNeGA.
  7. Operators shall display prominently in the prescribed format all the service charges to the general public and ensure that excess service charges, over and above the charges fixed by TNeGA are not levied on the works done or for the services provided.
  8. Operators shall ensure continuous and uninterrupted internet connectivity with a minimum bandwidth of 2 Mbps so that citizens can get services uninterrupted. In case of any technical failure of connectivity redundancy should be available in the Centres.
  9. Working hours of the Centre shall be fixed and displayed in front of the centre and the working hours should be minimum 8 hours in a day.
  10. Operators is solely responsible for all transactions/modifications made using user id.
  11. Operators is strictly instructed adhere to the services charges as specified and confirm that no excess service charges are collected from the Public .
  12. In case of any discrepancies found in the infrastructure and services offered to the Public during the inspection or in case of any allegation / complaints received to TNeGA, TNeGA shall block the ids and necessary action will be initiated against the Oerators.
  13. As and when additional services are added to the existing services through TNeGA, if required additional IT infrastructure should be Upgraded / arranged.

Last date to apply:14.04.2023(10 PM)


விண்ணப்பத்திற்கான கடைசி நாள் :14.04.2023(10PM)

How to apply: user manual and Video link


விண்ணப்பிப்பது எப்படி : பயனர் கையேடு மற்றும் வீடியோ இணைப்பு


WhatsApp grievance redressal numbers
8925297888, 8925407888, 8925137888, 8925327888

No comments:

Post a Comment

Popular Posts