டிஜிட்டல் இந்தியா - Digital India - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, November 21, 2018

டிஜிட்டல் இந்தியா - Digital India

“டிஜிட்டல் இந்தியா”- இந்திய அரசின் தலையாய திட்டங்களில் ஒன்று. இதன் நோக்கம் இந்திய மக்களை டிஜிட்டல அதிகாரமிக்கவர்களாகவும், ஒரு அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாறுபாடடையச் செய்வது.
இந்திய திறமைகளையும், தகவல் தொழில்நுட்பத்தையும் எதிர்கால இந்தியாவாக உருமாற்றுவதில் இதன் தீவிர கவனம் உள்ளது.
1. ஓவ்வொரு குடிமகனுக்கும் உட்கட்டமைப்புவசதி பயன்பாடாவது.
2. தேவைக்கேற்ற ஆளுமை மற்றும் சேவைகள்
3. ஓவ்வொரு குடிமகனுக்கும்  அதிகாரமேம்பாடு




  • மிண்ணிம மையங்களான பொதுச்சேவைமையங்கள் அஞ்சலகங்கள், பள்ளிகள், கிராம சபைகள் போன்றவற்றில் பிரசாரம், பிரசுரங்கள் மற்றும் கல்வியூட்டம்  மூலமாக மக்களை சென்றடைதல்
  • எல்லா இணைய பயணர்களையும் டிஜிட்டல் ஊடக பிரசாரங்கள் மூலமாக ஒன்றிணைத்தல்.
  • எல்லோருக்கும் இத்திட்டத்தின் நோக்கம் சேவைகள் மற்றும் பயன்கள் குறித்து தெரியப்படுத்துவது.
  • மின்-சேவைகள் குறித்து பிரபலப்படுத்தவதும் அதன் சென்றடையும் திறனை மேம்படுத்துவதும்.
  • இந்திய மக்களுக்கு செயல்பாட்டு- டிஜிட்டல்  கல்வியறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் இணைய சுகாதாரம் குறித்து கல்வி புகட்டப்படல் வேண்டும். டிஜிட்டல் உட்கட்டமைப்பு சிறந்த பயன்பாடு பெறவும், வளரவும், டிஜிட்டல் இந்திய வாரத்தில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்
  • குடிமக்களை டிஜிட்டல் இந்திய திட்டத்துடன் இணைய ஊக்கப்படுத்துவதும் மற்றும் உற்சாகப்படுத்துவதும் டிஜிட்டல் இந்திய வாரத்தின் நோக்கங்கள் ஆகும்.
டிஜிட்டல் இந்தியா வாரம் நமது மரியாதைக்குறிய இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் ஜுலை 1 2015 தொடங்கப்பட்டது.  இதனுடன் பல புது சேவைகளும் தயாரிப்புகளும் (டிஜிட்டல் பெட்டகம் போன்றவை) தொடங்கப்பட்டன.



இந்தத் திட்டம் பல்வேறு இலாகாக்களையும் அரசு இயந்திரங்களையும் அமைச்சகங்களையும் ஒரு குடையின் கீழ் கொணர்வதாகும். இத்திட்டத்தின் ஒருங்கினைப்பை மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மிண்ணணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஒருங்கினைக்கிறது.

Popular Posts