TN Velaivaaippu Renewal - வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, November 21, 2018

TN Velaivaaippu Renewal - வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்  துறை வழங்கியுள்ளது.

                      

இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது 24.01.2019-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 24.01.2019 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

Popular Posts