தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Thursday, December 20, 2018

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம்
       



 

இக்காப்பிட்டுத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் 72,000/க்கு கீழ் உள்ளவர்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வருமானத்திற்கு உரிய வருமானச் சான்று அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய பரிசீலனைக்குப்பிறகு பெற்றுக்கொள்ளலாம் இந்தத் திட்டத்தின்கீழ் தரமான அறுவை மற்றும் மருத்துவ சிகிச்சைப் பதிவு பெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
இக்காப்பிட்டுத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் 72,000/க்கு கீழ் உள்ளவர்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வருமானத்திற்கு உரிய வருமானச் சான்று அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய பரிசீலனைக்குப்பிறகு பெற்றுக்கொள்ளலாம் இந்தத் திட்டத்தின்கீழ் தரமான அறுவை மற்றும் மருத்துவ சிகிச்சைப் பதிவு பெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த காப்பிட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 5,00,000 வழங்க வழிவகை செய்யபட்டுள்ளது.
 இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் பயன் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைஅறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை நோய்கள்
இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச்சிகிச்சை/cardiology and cardiothoracic Surgery
புற்று நோய் மருத்துவம் /Oncology
சிறுநீரக நோய்கள் /Nephrology/urology
மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery
கண் நோய் சிகிச்சை/opthalmology
இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள் /Plastic Surgery
காது,மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T
கருப்பை நோய்கள்/Gynaecology
இரத்த நோய்கள் / Haematology
தகுதி

இந்த திட்டம்குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்
2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்
3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.
இத்திட்டத்தில்முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள்முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.
தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த 1.57 லட்சம் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் ஆண்டுக்கு லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்
தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில்தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1.57 கோடி குடும்பங்கள் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையில்அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு லட்சம் ரூபாய்க்கான தேசிய மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் தனியாக அடையாள அட்டை ஏதும் பெற தேவையில்லை. முதல்வரின் விரிவடைந்த காப்பீடுக்கான அடையாள அட்டையே போதும். வெளிமாநிலங்களிலும் தேவைப்பட்டால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்..

புதிய காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கு படிவம் எங்கு எப்படி பெறுவது?

ஒருவர் புதிதாக காப்பீட்டு திட்ட அட்டை பெற வேண்டுமென்றால் முதலில் அவர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை திட்ட இணைப்பு அலுவலர் அவர்களை சந்திக்க வேண்டும் பின்னர் அவர்கள் காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கான தகுதி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதற்கான படிவத்தை வழங்குவார் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகத்திலும் இந்த படிவத்தை பெறலாம் நினைவில் கொள்ளுங்கள் இந்த படிவம் முற்றிலும் இலவசமான ஒன்று இதை விற்கும் அதிகாரம் எந்த ஒரு தனி நபருக்கும் வழங்கப்படவில்லை குறிப்பாக எந்த ஒரு வர்த்தக மையத்தில் இந்த படிவத்தை விற்க இயலாது அவ்வாறு விற்பது சட்டப்படி குற்றமாகும் எங்கேனும் படிவம் விற்கப்படும் பட்சத்தில் நீங்கள் உங்கள் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் மாவட்ட திட்ட அலுவலகம் போன்றவற்றில் புகார் தெரிவிக்கலாம் இந்தப் படிவங்கள் பெறுவதற்கு கட்டாயம் உங்களுடைய ரேஷன் கார்டு அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு படிவம் மட்டும் வழங்கப்படும் இந்த படிவத்தை நகலெடுப்பது பிரதி எடுப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும் ஆகவே படிவம் தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு படிவத்தை தகுந்த விளக்கத்துடன் பெற்றுக்கொள்ளலாம்

மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுக்கும் போது யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

இந்த குறைபாட்டை தவிர்க்கும் பொருட்டுஅங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் மக்களுக்கு சேவையாற்ற மருத்துவமனையிலேயே தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கும்பொதுமக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சேவை ஆற்றுவார்கள் மேலும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை செய்வது சிகிச்சை செய்து இருக்கும் முறை போன்றவற்றையும் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் மக்களின் பயத்தை போக்கவும் மருத்துவமனையில் உள்ள குறைகளை தீர்க்க உடனடியாக மருத்துவமனையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொடர்பு அலுவலரை சந்திக்கலாம்

காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் ஒருவருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி தடுப்பது?

பொதுவாக காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதன் நோக்கம் 100 சதவீத இலவச சிகிச்சை அவ்வாறு இருக்கும் பட்சத்தில் காப்பீடு திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ஏதேனும் பணம் வசூல் செய்யும் பட்சத்தில் முதல்கட்டமாக தொடர்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம் அத்துடன் இதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் புலனாய்வு குழு அலுவலர்கள் (Vigilance Officers ) உங்கள் இல்லம் நாடி வரும் பொழுதும் மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வரும் போதும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம் அரசின் இலவச சேவை மக்களிடம் சென்று அடைவது உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழுவினர் செயல்படுகின்றனர் இவர்கள் பொதுமக்களிடமிருந்து வரும் கட்டண வசூல் சார்ந்த குறைகளை உடனடியாக தீர்ப்பதற்காக பிரத்தியோகமாக நியமிக்கப்பட்டவர்கள் ,சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அச்சம் தவிர்த்து புகார்கொடுத்து அவர்கள் செலுத்திய தொகையை மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது ஆனால் நினைவில் கொள்ளுங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஒரு முற்றிலும் இலவச சேவை நோக்கத்துடன் தொடங்கப்பட்டது கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும்


No comments:

Post a Comment

Popular Posts