ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பணத்தை எளிமையான முறையில் ஆன்லைனில் பெறுவது எப்படி..? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, December 19, 2018

ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பணத்தை எளிமையான முறையில் ஆன்லைனில் பெறுவது எப்படி..?

ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பணத்தை எளிமையான முறையில் ஆன்லைனில் பெறுவது எப்படி..?

இப்போதெல்லாம் ஈபிஎஃப்ஓ (ஓய்வூதிய அமைப்பு) சார்ந்த பெரும்பாலான நிதி சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. தற்போது ஈபிஎஃப் உறுப்பினர்கள் அவர்களது ஈபிஎஃப் தொகையைப் பெறுவதற்கு அவர்களுடைய முதலாளியையோ அல்லது ஈபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரியையோ சென்று பார்க்க வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே தாக்கல் செய்து தீர்வுக் காணலாம்.
அது எப்படி என்பதை தான் இப்போது பார்க்கபோகிறோம்.  
யாரெல்லாம் ஆன்லைனில் ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் தொகையை பெற்றுக் கொள்ளலாம்?
ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் திட்ட வருமானத்தை ஆன்லைனில் பெற்றுக் கொள்ள சில குறிப்பிட்ட நிபந்தனைகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு.
1. விண்ணப்பதாரர் செயல்பாட்டிலுள்ள யுஏஎன் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் அவர் / அவளுடைய ஆதார் எண்ணை ஈபிஎஃப் வுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.
4. ஏனென்றால், ஈபிஎஃப்ஓ ஆன்லைனில் உங்கள் கோரிக்கையை செயல்படுத்த உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எனப்படும் ஒரு முறைக் கடவுச் சொல்லை அனுப்பும்.
5. விண்ணப்பதாரருடைய வங்கிக் கணக்கு ஐஎஃப்எஸ்சி குறியீட்டுடன் ஈபிஎஃப்ஓ தகவல் தளத்தில் இணைக்கப்பட வேண்டும்.
6. நிரந்த கணக்கு எண்ணும் (பான்) ஈபிஎஃப்ஓ தகவல் தளத்தில் இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் திருப்தியடைந்தால் நீங்கள் ஆன்லைனில் ஈபிஎஸ் மற்றும் ஈபிஎஃப் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.  
ஈபிஎஃப் தாக்கல்களின் வகைகள்
விண்ணப்பதாரர் பணம் பெற்றுக் கொள்ளக் கூடிய ஈபிஎஃப் தாக்கல்கள் மூன்று வகைப்படும். ஈபிஎஃப்-ல் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
1. உங்கள் ஈபிஎஃப் தொகையை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
2. உங்கள் ஈபிஎஸ் தொகையை (பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டம்) ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
3. ஈபிஎஃப் தொகையை பகுதியாகவோ அல்லது முன்கூட்டியோ பெற்றுக் கொள்ளுதல்    
ஈபிஎஸ் மற்றும் ஈபிஎஃப் பணத்தை ஆன்லைனில் பெறுவது எப்படி?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை ஈபிஎஸ் மற்றும் ஈபிஎஃப் தொகையை ஆன்லைனில் எப்படி பெறுவது என்பதைப் பற்றிய படிநிலைகளாகும்.

1. உறுப்பினர்களுக்கான யுஏஎன் இணையதளத்தில் சென்று உள்நுழைந்து உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள். (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)
2. ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் "ஆன்லைன் சேவைகள்" என்கிற தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
3. பதிவு செய்யப்பட்ட கேஒய்சி விவரங்கள் சரியா அல்லது தவறா என்று சோதிக்கவும்.
4. கொடுக்கப்பட்டுள்ள மூன்று தேர்வுகளில் பணத்தை எடுக்க நீங்கள் விரும்பும் தேர்வைத் தேர்ந்தெடுத்து பின்னர் வேண்டுகோளைச் சமர்ப்பியுங்கள். (i) முழுமையான வருங்கால வைப்பு நிதி தீர்வு (ii) பகுதியாக பிஎஃப் தொகையை எடுத்தல் (கடன் / முன்பணம்) (iii) ஈபிஎஸ் தொகையை எடுத்தல்
5. யுஏஎன் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி ஆன்லைன் பிஎஃப் தாக்கலை சரிபார்க்கவும். ஓடிபி யை உள்ளேயிட்டு பணத்தைப் பெறுவதற்கு சமர்பிக்கவும்.
6. ஈபிஎஃப்ஓ உங்கள் கேஒய்சி விவரங்கள் அதாவது ஆதார் எண் விவரங்களை யுஏடிஐ தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளும். பிறகு உங்கள் ஆன்லைன் பிஎஃப் தாக்கல் செயல்படுத்தப்படும், தாக்கலுக்கான பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும்.  
ஈபிஎஃப் தாக்கல் 5 நாட்களில்
உங்கள் ஈபிஎஃப் கணக்குடன் யுஏஎன் அல்லது உலகளாவிய கணக்கு எண் அத்துடன் ஆதார் எண் ஆகியவற்றைப் பதிவு செய்வதன் மூலம் உங்கள் தாக்கல் ஐந்து நாட்களில் செயல்படுத்தப்படும்.
உங்கள் தாக்கல் ஐந்து நாட்களுக்கு மிகாமல் செயல்படுத்தப்படுவதற்கு நீங்கள் ஈபிஎஃப் ஐ தாக்கல் செய்ய அதற்கான பொருத்தமான இணையதளத்தில் ஆன்லைன் தாக்கல் செய்திருக்கிறீர்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். கூடுதலாக ஈபிஎஃப் தாக்கல் செய்யும் நபர் அது தொடர்புடைய யுஏஎன் எண்ணை வைத்திருக்க வேண்டும். யுஏஎன் உடன் வெவ்வேறு கேஒய்சி ஆவணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் ஈ - கேஒய்சி ஆவணங்கள் நிறுவனத்தின் தற்போதைய முதலாளியால் சரிபார்க்கப்பட வேண்டும். 
 
செயலியின் வழியாக ஈபிஎஃப் தொகையை பெறுதல்.

ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் அவர்களுடைய ஈபிஎஃப் பணம் பெறுதல் போன்ற தாக்கல்களை மொபைல் செயலியான யுமாங் வழியாக பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த விண்ணப்பம் புதிய தலைமுறை ஆளுமைகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் செயலியான யுமாங் செயலியுடன் ஆன்லைனில் தாக்கல்களைப் பெறுவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment

Popular Posts