தமிழகம் முழுவதும் ஆதார் சேவை மையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய கட்டணம் உயர்வு: இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, January 2, 2019

தமிழகம் முழுவதும் ஆதார் சேவை மையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய கட்டணம் உயர்வு: இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு






தமிழகம் முழுவதும் ஆதார் சேவை மையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் தனிநபர் ஒவ்வொருவரும் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்துதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள்அனைத்து தாலுகா அலுவலகம்மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் நிரந்தர சேவை மையங்கள் இயங்கி வருகிறது. இங்கு புதிய ஆதார் வழங்குவதுஆதார் அட்டையில் பிழை திருத்துவது போன்ற பணிகள் நடக்கிறது. முதன் முறையாக ஆதார் பதிவு செய்யும்போது கட்டணம் ஏதும் வசூலிக்ககப்படுவது இல்லை. ஆனால் பெயர் திருத்தம் உள்ளிட்டவைக்கு அரசு நிர்ணயித்துள்ள Rs.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தபால் நிலையங்களில் 1,435 ஆதார் சேவை பதிவு மற்றும் திருத்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்மாநிலம் முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் உள்ள தனிநபர்களின் ஆதார் திருத்தம் மேற்கொள்ளுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் அரசு நிறுவன மேலாண் இயக்குனர் ஜான் லூயிஸ் அனைத்து மாவட்ட ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதார் சேவை மையங்களில் ஆதார் அட்டையில் உள்ள பிழை திருத்தம்புகைப்படம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு இதுவரை Rs.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி கைரேகை பதிவுபிறந்த தேதி பிழைபெயரில் பிழை போன்றவற்றை திருத்தம் செய்ய Rs.50 வசூலிக்கப்படும். ஆதார் அடையாள அட்டை பிரிண்ட் செய்ய Rs.30கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை ஆதார் சேவை மையங்களில் 2ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Popular Posts