ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Monday, January 28, 2019

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?


ஈமெயிலில் CC, BCC என்றால் என்னஅதன் பயன்கள் என்ன?


நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐடி்க்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால்உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐடி , Cc யில் மற்றவர் ஐடி .

இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.

இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....!
   






No comments:

Post a Comment

Popular Posts