விவசாயிகளுக்கு 6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் : தகுதியான விவசாயிகள் யார்?.. - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, February 8, 2019

விவசாயிகளுக்கு 6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் : தகுதியான விவசாயிகள் யார்?..


விவசாயிகளுக்கு 6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் : தகுதியான விவசாயிகள் யார்?..

சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் யாரெல்லாம் பயன் பெறலாம் என்ற தகவல்களை மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.


அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் 12 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் கிசான் சம்மன் என்ற இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான வழிமுறைகளை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் தவணை மார்ச் 31க்குள் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இரண்டாவது தவணைக்கு ஆதார் கார்டு அவசியம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தை பெற தகுதியானவர்கள் :
சிறு விவசாயிகள் என்றால் கணவன், மனைவி மற்றும் மைனர் வாரிசு ஆகியோர் குடும்பமாக இருக்க வேண்டும். அவர்கள் இரண்டு ஹெக்டேர் அதாவது 5 ஏக்கருக்கு குறைவான நிலத்தில் விவசாயம் செய்திருக்க வேண்டும். அவர்கள் விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் மாநில அல்லது யூனியன் பிரதேச ரெக்கார்டுகளில் பதிவாகியிருக்க வேண்டும்.
தகுதியில்லாத விவசாயிகள் யார்?..
·         முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் பதவி வகிப்பவர்கள்
·         முன்னாள்/இந்நாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள்/இந்நாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில லெஜிஸ்டேட்டிவ் முன்னாள்/இந்நாள் உறுப்பினர்கள், முன்னாள்/இந்நாள் முனிசிபாலிட்டி மேயர்கள் மற்றும் முன்னாள்/இந்நாள் பஞ்சாயத்து தலைவர்கள்
·         முன்னாள்/இந்நாள் மத்திய, மாநில அரசு ஊழியர்கள். (இதில் கிளாஸ் 4 மற்றும் குரூப் டி ஊழியர்களுக்கு விலக்கு)
·          மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் பெறும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் (கிளாஸ் 4 மற்றும் குரூப் டி ஊழியர்களுக்கு விலக்கு)
பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் யாராவது தங்கள் சுயவிவரத்தை தவறாக அளித்து பயனடைந்தால், செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதோடு அவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படும். இந்த திட்டம் நடப்பு ஆண்டிலிருந்தே அமலுக்கு வரும் எனவும், முதல் தவணை மார்ச் மாதம் வழங்கப்படும் என்றும் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.No comments:

Post a Comment

Popular Posts