RTE 2019 கட்டணம் இல்லாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க ஒரு அறிய வாய்ப்பு! - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, April 24, 2019

RTE 2019 கட்டணம் இல்லாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க ஒரு அறிய வாய்ப்பு!




நாங்கள்தான் அரசுப் பள்ளியில் படித்தோம். எங்கள் பிள்ளையையாவது மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. ஆனால்எல்.கே.ஜி-யிலேயே எக்கச்சக்கமாகக் கட்டணம் வாங்குகிறார்களே!'' என வருந்தும் பெற்றோர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறது, 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்'.
இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம், `பொருளாதார அளவில் நலிந்த பிரிவினருக்குச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளைத் தவிரஇதர அனைத்துத் தனியார்நர்சரிபிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களைக் கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்என்கிறது. இந்த 25 சதவிகித இடங்களில் சேரும் அனைத்துக் குழந்தைகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்திவிடும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பெரும்பாலான பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்த்தாலும்சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும் மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பெற்றோர்கள் பயன்படுத்திதங்களுடைய குழந்தையை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்கலாம். 
இந்த ஆண்டு `கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்குஉட்பட்டு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்களுக்குஆன்லைன் மூலம் சேர்க்கை நடந்துவருகிறது ஏப்ரல் 22  முதல் மே 18-ம் தேதி வரை விண்ணபபிக்கலாம்  என்று அறிவித்துள்ளது.


மாணவர்கள் சேர்க்கைக்கு தற்போது ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறுவதால்விண்ணப்பத்தின் நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். மேலும்ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளனஎவ்வளவு காலி இடங்கள்  உள்ளன என்ற விவரங்களையும் http://tnmatricschools.com/rte/rtepdf.aspx# என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம். 
பெற்றோர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஐந்து தனியார்ப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துஎந்தெந்தப் பள்ளிகளில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரத்தை ஆன்லைன் வழியே தெரிந்துகொண்டு உடனே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது காலியாக உள்ள இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்களைப் பெற்றிருந்தால்குலுக்கல் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 
ஏற்கெனவே தனியார்ப் பள்ளியில் சேர்த்து கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் யோசித்துவரும் பெற்றோர்கள்அதே பள்ளியில் காலி இடங்கள் இருந்தால் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இடம்பெறலாம். ``இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் வராமல் வெளிப்படையான முறையில்தெளிவான திட்டமிடலில் குழந்தைகளைச் சேர்த்து பள்ளிக் கல்வித்துறை சாதனை படைத்திருக்கிறது. தற்போது காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களைபெற்றோர்கள் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்"
பள்ளிக் கல்வித்துறையின் இணையதளமான www.dge.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகம்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம்மாவட்டக் கல்வி அலுவலகம்அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரவள மைய அலுவலகம்அரசு இ-சேவை மையங்கள் போன்றவற்றிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம்பிறப்புச் சான்றிதழ்குடும்ப அட்டைவருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். 
கட்டாயக் கல்விச் சட்டத்தில் நலிவடைந்த பிரிவினர்வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் என்ற இரண்டு வகைகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது.  நலிவடைந்த பிரிவில் இரண்டு லட்சத்துக்கும் குறைவாக வருமானம் கொண்ட அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்க விரும்புகிறவர்கள் பொதுப்பிரிவினரைத் தவிர அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். 

Tamilnadu RTE Age Limit & Domicile Criteria

What is the Age limit & eligibility criteria? The age eligibility criteria go as follows:
Child Birth Year Child Eligible   
Children whose Birth date is between 1.08.2015 – 8.08.2016 For LKG Admission
Children whose Birth Date is between 2.08.2013 – 1.08.2014 For 1st Class Admission
Domicile Criteria: Applicant must be a permanent resident of Tamil Nadu state and should hold a valid domicile certificate of Tamil Nadu

RTE Tamilnadu Admission Helpline


Contact InfoBe in Touch
Tamilnadu RTE e-Mailrtetnqueries@gmail.com
EMIS Helpline No.+91 – 44 28270169
Official Authority AddressState Project Directorate, Samagra Shiksha, DPI Campus, College Road, ​​​​Nungambakkam, Chennai – 60006


No comments:

Post a Comment

Popular Posts